இந்தியா

நவீன உலகின் பொறியியல் அதிசயம் "செனாப் பாலம்"

Published On 2024-06-15 04:46 GMT   |   Update On 2024-06-15 04:46 GMT
  • எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம்.
  • இது உலகின் 8வது அதிசயமாகும்.

ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். இந்த உயரம் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் என்பது சிறப்பாகும்.

செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரெயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து கொங்கன் ரெயில்வேயின் துணை தலைமை பொறியாளர் சுஜய் குமார் கூறுகையில், "இந்த திட்டம் மிகவும் சவாலானது. இந்த திட்டத்தால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறினார்.

ரியாசி துணை கமிஷனர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், "இது நவீன உலகின் பொறியியல் அதிசயம். ரெயில் ரியாசியை அடையும் நாள், மாவட்டத்தையே மாற்றும் நாளாக இருக்கும். இது பெருமைக்குரிய தருணம். எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம்.

இது உலகின் 8வது அதிசயமாகும். இந்த பாலம் காற்றின் வேகம், வலிமை, அற்புதம். பாலத்தை திறக்கும் சரியான தேதி சொல்ல முடியாது, ஆனால் அந்த நாள் விரைவில் வரும் என்று கூறினார்.

Tags:    

Similar News