இங்கயுமா?.. பவர் கட் ஆனதால் பாதியில் நின்ற மெட்ரோ ரெயில்..
- நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது
- மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம் நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது.