இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஆயிரக்கணக்கான வங்காள தேசத்தினர்.. தடுத்து நிறுத்திய BSF - வீடியோ
- கடந்த 3 மட்டுமே சுமார் 232 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிறுபான்மையினரான இந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- சகர்திகி [Sagardighi] ஆற்றில் இறங்கி இரு நாடுகளை பிறகும் எல்லை வேலிக்கு 400 மீட்டர் தொலைவில் அவர்கள் தயாராக நின்றுள்ளனர்
வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில், ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசை உருவாகியுள்ளது.
சிறைகள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியில் வந்த நிலையில், இன்னும் அங்கு கலவரங்கள் ஓய்ந்தபாடில்லை. கடந்த 3 மட்டுமே சுமார் 232 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சிறுபான்மையினரான இந்துக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், வங்காள தேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல் நடக்கும் வாய்ப்புள்ளதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை [BSF] தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்ச பேகர் [Cooch Behar] மாவட்டத்தை ஒட்டிய வங்காள தேச எல்லை வழியாக நேற்று ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றுள்ளனர்.
நேற்று காலை 9 மணியளவில் எல்லையில் உள்ள சகர்திகி [Sagardighi] ஆற்றில் இறங்கி இரு நாடுகளை பிறகும் எல்லை வேலிக்கு 400 மீட்டர் தொலைவில் அவர்கள் தயாராக நின்றுள்ளனர். ஆனால் இதையறிந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களைப் பாதுகாப்பாக வங்காள தேசத்துக்குள்ளேயே திருப்பி அழைத்து செல்லும்படி வங்காள தேச எல்லைப் படையினரிடம்(BGB) தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் இறங்கி இந்தியாவுக்குள் நுழையத் தயாராக நிற்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திய - வங்காளதேச எல்லையில் நடக்கும் ஊடுருவலை தடுக்கும் பணிகளை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.