INDIA கூட்டணியிலிருந்து விலகாவிட்டால் கெஜ்ரிவாலை கைது செய்வதாக மிரட்டுகிறார்கள்: ஆம் ஆத்மி
- ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
- டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.
INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.