இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்- பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அழைப்பு

Published On 2024-09-25 12:20 GMT   |   Update On 2024-09-25 12:20 GMT
  • லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
  • சிறப்பு பூஜை நடத்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோயில்கள் சிறப்பு பூஜைகள் நடத்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஆந்திரா மாநிலம் முழுவதும் வரும் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க சிறப்பு பூஜை என கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News