திருப்பதி பயணத்தை ரத்து செய்து ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
- ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு.
- திருப்பதியில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்த நிலையில் பயணத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை, ஆந்திர அரசு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திரா அறநிலையத்துறை சட்டம் 136ன் கீழ், இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் னெ திருமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூடவே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருமலையில் இந்து அல்லாதவர்களுக்காக ஏராளமான இடத்தில் பேனர்களுடன் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-
திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ?
நான் முதலமைச்சராகும் முன்பு ஏழுமலையானை வழிபட்ட பின்னரே பாத யாத்திரையை தொடங்கினேன்.
என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை டிக்ளரேஷன் படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
இறைவனை சந்தித்து வழிபட கூட இந்த ஆட்சி தடை விதக்க முயற்சிக்கிறது. எனது தந்தை முதல்வராக இருந்தபோது, 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார்.
நானும் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தேன்.
திருப்பதிக்கு நான் பயணம் மேற்கொள்ள இருந்த அதே நேரத்தில் பஜாகவினரும் திருப்பதியிலு குவிந்து வருகின்றனர்.
நான் வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். இந்து, முஸ்லீம், சீக்கியம் என அனைவரையும் நான் மதிக்கிறேன்.
முதல்வராக இருந்த ஒருவரையே கோயிலுக்கு அனுமதிக்க மறுத்தால், தலித்களை எவ்வாறு நடத்துவார்கள்?
திருப்பதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை நெய் வாங்க டெண்டர் விடுவது வழக்கம். சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியில் 15 முறை டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்திலும் நெய்க்கான டெண்டர் 15 முறை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.