இந்தியா

தலைதூக்கிய ஈகோ: பதவி ஏற்க முடியாமல் திணறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

Published On 2024-06-26 15:30 GMT   |   Update On 2024-06-26 15:30 GMT
  • இடைத்தேர்தலில் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
  • அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் பிடிவாதம்.

மேற்கு வங்காளத்தில் சயந்திகா பந்தியோபாத்யாய் மற்றம் ரயத் ஹொசைன் சர்கார் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவர்னர் பரிந்துரை அல்லது ஒப்புதலுடன் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.

ஆனால் மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் சட்டமன்றத்தில் அவர்கள் இருவரும் பதவி ஏற்பதை மறுத்து விட்டார். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க வேண்டும் என்றார்.

ஆனால் சட்டசபையில்தான் பதவி ஏற்போம். நீங்கள் சட்டமன்றத்திற்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கடிதம் எழுதினர்.

இன்று பதவி ஏற்பதற்கான கடைசி நாள். இருவரும் சட்மன்ற வளாகத்தில் அமர்ந்திருந்தனர். மாலை 4 மணி நேரம் வரை காத்திருந்த நிலையில், திடீரென கவர்னர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.

இதனால் இரண்டு பேரும் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பந்த்யோபாத்யாய் கூறுகையில் "கவர்னர் டெல்லிக்கு சென்று விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். நாங்கள் மக்களுக்கு பதில் கூற வேண்டியவர்கள். சட்டசபையில் பதவி பிரமாணம் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

மேற்கு வங்காள சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில் "கவர்னர் சட்டமன்றத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இதுபோன்ற தடை ஏற்படுத்துவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் ஈகோ பிரச்சனைக்குள் திரும்பியுள்ளார். அவருடைய அதிகாரித்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். என்னுடைய அதிகாரிகம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துவேன்" என்றார்.

மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்ததாக எந்தவிதமான சம்பவத்தையும் நாங்கள் கேட்டதில்லை.

Tags:    

Similar News