வாக்கு ஜிஹாத், சமரச அரசியலுக்காக டிஎம்சி ஓபிசி-யின் உரிமைகளை பறித்துள்ளது: பிரதமர் மோடி
- ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
- மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பராசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. சமரச அரசியல் மற்றும் வாக்கு ஜிஹாத் வசதிக்காக ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அந்த கட்சி பறித்து விட்டது. மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
துரோகத்தையும், பொய்களையும் வெளிப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது என்பதற்கு நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது சிறந்த சாட்சி. நீதித்துறையை இந்த கட்சியால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். நீதித்துறை மற்றும் நம்முடைய அரசியலமைப்பு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? அவர்கள் நீதிபதிகளை தாக்கும் முறை இதுவரை இல்லாததாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.