இந்தியா (National)

நாட்டிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்

Published On 2024-09-30 14:32 GMT   |   Update On 2024-09-30 14:32 GMT
  • நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகல் உள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத் (12.25%), மகாராஷ்டிரா (10.44%), உத்தரப்பிரதேசம் (7.54%), ஆந்திரப்பிரதேசம் (6.51%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15% தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (12.84%), குஜராத் (12.62%), உத்தரப்பிரதேசம் (8.04%), கர்நாடகா (6.58%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 

Tags:    

Similar News