இந்தியா (National)

சாலை விபத்துகளில் காயம் அடைபவர்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்- ஆய்வில் தகவல்

Published On 2024-10-19 05:41 GMT   |   Update On 2024-10-19 05:41 GMT
  • கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.
  • 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.

புதுடெல்லி:

கடந்த ஆண்டு (2023) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த சாலை விபத்து தொடர்பான ஆய்வுகள் வெளியாகி உள்ளது.

சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 55,769 பேரும், கேரளாவில் 54,320 பேரும் காயம் அடைந்து 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தான் அதிக அளவில் சாலை விபத்துகளில் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்களில் 44 சதவீதம் பேர் (கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேர்) மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆவார்கள். இதில் 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.

இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாலை பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News