இந்தியா (National)

சபரிமலையில் கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் கூட்டம்

Published On 2024-10-19 08:29 GMT   |   Update On 2024-10-19 08:29 GMT
  • சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர்.

திருவனந்தபுரம்:

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம்(17-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்த நிலையில், இன்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தி அனுப்பவும் போதிய போலீசார் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News