இந்தியா
ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது பா.ஜனதா
- மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.
- தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன
காலை 8.40 நிலவரப்படி பா.ஜனதா 87 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்கிளிலும் முன்னிலை வகித்தன. பின்னர் நேரம் செல்ல செல்ல இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 10 மணி நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்றது. 199 இடங்களில் 103 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.