அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள்: நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை
- அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள் என நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
- டிராய் அமைப்பின் இந்தப் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ட்ரூ காலர் செயலி இருந்தால் புதிய நம்பரில் இருந்து அழைப்புகள் வரும்போது அதில் பெயரும் சேர்ந்து காண்பிக்கும். இது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பேருதவியாக இருப்பதால் பலரும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொலைபேசி அழைப்புகளின்போது அழைப்பாளர்களின் பெயரையும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
டிராய் அமைப்பின் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ட்ரூ காலர் நிறுவனம் கூறுகையில், இந்தப் புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.