இந்தியா

மண்வீட்டிற்குள் 1st Floor, குளுகுளு சூழல்.. வைரலாகும் வீடியோ

Published On 2024-07-02 07:04 GMT   |   Update On 2024-07-02 07:04 GMT
  • வீடியோ வைரலாகி, 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
  • பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேசம்:

சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் லைக்குகளை பெற வித்தியாசமான வீடியோக்களையும், சிலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் குமக்கட் லாலி என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாராகிராமில் 54.4K ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட குமக்கட் லாலி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு தனக்கு ஏற்படும் அனுபவங்களை பகிர்ந்து வருகிகிறார். அந்தவகையில், மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கிராமத்திற்கு சென்ற குமக்கட் அங்கு இரண்டு மாடிகளைக் கொண்ட பாரம்பரியமான மண் வீட்டை கண்டு ஆச்சரியப்பட்டார்.

வீடியோவில், ஆய்வின் போது தனக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதால், அங்கு வசிப்பவர்களிடம் தண்ணீர் கேட்டதாகவும், அதற்கு ஒரு குடும்பத்தினரால் அன்பாக வரவேற்கப்பட்டு தண்ணீர் கொடுப்பட்டது என்று குமக்கட் லாலி கூறுகிறார்.

குடியிருப்பின் உள்ளே சுற்றி பார்க்க அழைத்து செல்லப்படும் போது, வீட்டின் சிறிய வாசல் வழியாக குனிந்து சென்று விசாலமான அறைகளையும் மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளையும் கண்டு திகைத்துப் போகிறார்.

வெளியே 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தபோதிலும், மண் வீட்டின் உட்புறம் 20 முதல் 25 டிகிரி வரை இருந்தது.

இந்த வீடியோ வைரலாகி, 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் பல பயனர்கள், கிராமப்புற கட்டிடக்கலையின் புத்தி கூர்மை மற்றும் எளிமைக்கு தங்கள் பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.


Tags:    

Similar News