பழங்குடியின அடையாளம்.. ஜார்கண்டின் மகள்.. தேர்தல் நட்சத்திரமான கல்பானா சோரன்- ஹேமந்த் வெற்றி எப்படி?
- ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
- காந்தே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்
ஜார்கண்ட் தேர்தல்
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணி
கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாராளராக நிற்கிறார்.
அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையில் இருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தாவினார்.
கல்பனா சோரன்
இதனால் ஹேமந்த் சோரன் கட்சி பின்னடைவு என்று கூறப்படுகிறது. சம்பாய் சோரன் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தாலும் ஹேம்நாத் சோரன் ஜனவரியில் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சி தலைமையில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த மக்களவை தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயனப்டுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கை பெற்றவராக திகழ்கிறார்.
கட்சியின் முகம்
எனவே இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாககாந்தே தொகுதியில் போட்டியிடும் கல்பனா சோரன் மாறியுள்ளார் ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.
அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களை சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது பேச்சு குறித்த திட்டமிடல் கல்பனாவிடம் உள்ளதாக ஆங்கில ஊடங்கங்கள் கூறுகின்றன.
இதனால் தங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்தன என இந்தியா டுடே கள நிலவரம் கூறுகிறது. நேற்றைய தினம் இறுதிக்கட்ட கட்ட பிரசாரத்தில் கல்பனா சோரனின் ஹெலிகாப்ட்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் போன் மூலமே பிரசார மைக்கில் உரையாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் வேண்டிய நிலையில் ஹேமந்த் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 41- 44 இடங்களிலும், பாஜக 36-39 இடங்களிலும், இதர கட்சிகள் 3-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோகபால் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது .