இந்தியா

கஸ்டடியில் இறந்த பழங்குடியின இளைஞன்.. கலெக்டர் ஆபீசுக்குள் ஆடைகளை கழற்றி போராடிய உறவினப் பெண்கள்

Published On 2024-07-16 12:01 GMT   |   Update On 2024-07-16 12:03 GMT
  • பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
  • மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவா என்ற 25 வயது பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக தேவாவும் அவரது உறவினர் கங்காராமும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே, 'உங்களது மகன் தேவா கஸ்டடியில் மாரடைப்பால் இறந்துவிட்டான்' என்று அவரது குடுபத்துக்கு போலீசிடம் இருந்து போன் வந்துள்ளது.

இதனால் பழங்குடியின இளைஞரான தேவாவின் குடும்பபும் உறவினர்களும் அதிர்ச்சியைடந்த நிலையில் போலீஸ்தான் தேவாவை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேவாவுடன் கல்யாணமாக இருந்த மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொதிப்படைந்த தேவாவின் உறவின பெண்மணிகள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்களின் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளே தரையில் படுத்து அழுது புலம்பியுள்ளனர். தங்களின் வளையல்களை உடைத்து கூச்சலிட்டனர் அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்ற நிலையில் அங்கு நடந்த கைகலப்பில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

தேவாவுக்கு மாரடைப்பு வந்தது உண்மைதான் என்றும் மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் வழங்கியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 'இளம் வயதில் எப்படி மாரடைப்பு வரும், தேவாவையும், கங்காரமையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் இருக்கும் கங்காராமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தேவாவின் உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

 

Tags:    

Similar News