இந்தியா

அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்தார் மஹுவா மொய்த்ரா

Published On 2024-03-28 05:56 GMT   |   Update On 2024-03-28 09:23 GMT
  • பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு.
  • இந்த குற்றச்சாட்டில் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாகவும், பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான ஐ.டி. மற்றும் ரகசிய குறுயீட்டை மற்றவருக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

என்றபோதிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில்தான் குடியுரிமை இல்லா வெளிநாட்டினருக்கு அல்லது என்ஆர்இ-க்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்த விரும்புவதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனில் இன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வரும் நிலையில், சம்மனை நிராகரித்துள்ளார். இன்று மதியம் கிருஷ்ணநகர் தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News