இந்தியா

பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து விபத்து.. 2 அக்னிவீரர்கள் உயிரிழப்பு

Published On 2024-10-11 12:24 GMT   |   Update On 2024-10-11 12:24 GMT
  • அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
  • வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சி செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் [Artillery Centre] செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்திலிருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

 

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத குண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் [20 வயது], சைபத் சித் [21 வயது] என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

 

உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News