இந்தியா

மக்களவைக்குள் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு - நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு

Published On 2023-12-13 08:12 GMT   |   Update On 2023-12-13 09:13 GMT
  • சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்
  • வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்

2001ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22-வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய பாராளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் அவையில் இருந்த உறுப்பினரகள் அச்சத்துடன் ஓடினர்.


கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Tags:    

Similar News