ஆந்திராவில் 2 மாதம் கடலில் மீன்பிடிக்க தடை: 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
- மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
- மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
அமராவதி:
ஆந்திர அரசு வங்காள விரிகுடா கடலில், மாநில பிராந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க 2 மாத காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தள்ளது. இறால் உள்ளிட்ட மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாட்கள்) 2 மாத காலம் இந்த தடை அமல்படுத்தப்படும். இந்த ஆண்டும் இதற்கான தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மீனவர்கள் வரும் 15-ந்தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது.
"மீனவர்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது அதிக அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள், இந்த தடைக்காலத்தில் வலைகள் மற்றும் படகுகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.