அரசியல் சார்புடைய பட்ஜெட்: மம்தா பானர்ஜி விமர்சனம்
- மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது.
- ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை.
2024-2025 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது, மக்களுக்கு எதிரான பட்ஜெட், மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு, தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கம், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது, தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு. பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதமாக குறைப்ப உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.