பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3750-ல் இருந்து ரூ.6620 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறியதாவது:
காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.
நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3750-ல் இருந்து ரூ.6620 ஆக உயர்ந்துள்ளது.
சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.
விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.