பயிர் காப்பீட்டுத் திட்டம்- மத்திய அரசு விளக்கம்
- தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.
- விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.