இந்தியா

மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் (கோப்பு படம்)

மோடி ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள்- மத்திய மந்திரி விளக்கம்

Published On 2022-12-11 18:24 GMT   |   Update On 2022-12-11 20:37 GMT
  • மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
  • நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான மாநாட்டில் பிரதமர் அலுவலகத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பலவேறு சலுகைகளை வழங்கி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிப்பு, ஓய்வூதியம் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான 15,000 பணியிடங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் நிரப்பப்பட்டுள்ளன. இது மோடியின் ஆட்சியில் மட்டுமே சாத்தியமானது. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்களிக்க வேண்டும். 


இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது அவர்களின் பங்களிப்பும் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த 1600க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல சட்டங்களும் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News