வீட்டிற்குள் 80 தொட்டிகளில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்த நபர் கைது
- 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி அவர் வளர்த்து விற்று வந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகுலின் தந்தை நொய்டாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 2013 இல் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அதனால் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ராகுலுக்கு காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரால் அந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து வியாபாரத்தில் இறங்கிய ராகுலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குறைப்பதற்காக ராகுல் கஞ்சா அடிக்க தொடங்கினார். பின்னர் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா வளர்க்க தொடங்கி பின்னர் அதனையே தனது தொழிலாக அவர் மாற்றியுள்ளார்.
நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெப் சீரிஸ்களை பார்த்து ஆன்லைனில் கஞ்சா விதைகளை தனது வீட்டில் ராகுல் கஞ்சா வளர்க்க தொடங்கியுள்ளார். அங்கு சுமார் 80 கஞ்சா செடிகளை லைட் மற்றும் ஏசி பொருத்தி வளர்த்து விற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீட்டில் கஞ்சா வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்த போலீசார் ராகுலை கைது செய்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.