இந்தியா

உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழை நீர் - மாற்றுவழியில் வெளியேறிய யோகி ஆதித்யநாத்

Published On 2024-08-01 01:34 GMT   |   Update On 2024-08-01 01:34 GMT
  • சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர்.
  • சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், கனமழையால் அம்மாநில சட்டசபைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்ணீர் தேங்கியதன் காரணமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை வளாகத்தில் இருந்து மாற்று வாசல் வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர். சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உ.பி. சட்டசபையில் இதற்கு முன்பு இந்த அளவு தண்ணீர் தேங்கியதை நாங்கள் பார்த்ததில்லை என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் பெய்துவரும் கனமழையால் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்க்குள்ளும் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News