இந்தியா

திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: சீரமைப்பு பணிகள் நிறைவு - வீடியோ

Published On 2024-07-19 03:24 GMT   |   Update On 2024-07-19 03:24 GMT
  • விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
  • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.

உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து அரங்கேறிய இடத்தில் மீட்பு பணிகள் மற்றும் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

ரெயில் விபத்துக்குள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றன. சேதமடைந்த ரெயில் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. விரைவில் இந்த வழித்தடத்தில் பழைய படி ரெயில்கள் செல்லும்.


Tags:    

Similar News