இந்தியா

ஆணின் வயிற்றுக்குள் இருந்த பெண் உறுப்புக்கள்.. அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி

Published On 2024-08-13 03:17 GMT   |   Update On 2024-08-13 03:22 GMT
  • அவரது அடிவயிற்றில் உள்ள கூடுதலான சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
  • முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உற்பத்தி செய்யும் ovary இருந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.

அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன்  கரு முட்டையை உருவாகும் ovary  இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த  ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News