பரபரப்பான சூழ்நிலையில் உ.பி. கவர்னருடன் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்திப்பு
- பிரதமரும், உள்துறை மந்திரியும் உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
- உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநில கவர்னரை சந்தித்துப் பேசினார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திடீரென இன்று கவர்னர் மாளிகைக்குச் சென்றார். அங்கு கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்துப் பேசினார். இருவரும் மாநில அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது.
உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடந்து வருகிறது. பா.ஜ.க.வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.