இந்தியா

பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது: அதேபோல் ஜிம்மில்... உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை

Published On 2024-11-08 07:07 GMT   |   Update On 2024-11-08 07:10 GMT
  • அறிவுறுத்தியுள்ளா். பெண்கள் ஜிம், யோகா, நாடக மையங்களில் பெண் டிரைனர்கள் அல்லது டீச்சர்கள் அமர்த்துவது கட்டாயம்.
  • பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது ஆசிரியர் இருக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் கடந்த 28-ந்தேதி லக்னோவில் கடந்த கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

அப்போது பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது. ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது. பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது ஆசிரியர் இருக்க வேண்டும். அதேபோல் பெண்கள் துணிக்கடைகளில் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும் போன்றவற்றை கொண்டு வரலாம் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் உறுப்பினர்கள் மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் ஆங்கில செய்தி நிறுவத்திற்கு கூறியதில் "இந்த ஆலோசனைகள் தொடக்க கட்டத்தில்தான் உள்ளது. இந்த பரிந்துரைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பிறகு இந்த பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் அரசு அமல்படுத்துவற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்" என்றார்.

இதற்கிடையில் ஷாம்லி மாவட்ட காண்காணிப்பு அதிகாரி ஹமித் ஹுசைன், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் ஜிம், யோகா, நாடக மையங்களில் பெண் டிரைனர்கள் அல்லது டீச்சர்கள் அமர்த்துவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன் டி.வி.ஆர். திறனுடன் சிசிடிவி சிஸ்டம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது டீச்சர் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News