ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் - பிரதமர் மோடி
- அயோத்தி தீப உற்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- அப்போது பேசிய அவர், கடவுள் ராமரின் லட்சியங்களை பின்பற்றுவது அனைத்து இந்தியர்களின் கடமை என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அயோத்தி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசியதாவது:
பகவான் ராமரின் ஆளுமையை போற்றவும், உலகளவில் நமது அடையாளத்தை நிலைநாட்டவும் கர்த்வய பாதையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தீபாவளி வந்துள்ளது. ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
பிரயாக்ராஜ் நகரில் 51 அடி உயரத்தில் ராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.