இந்தியா

தேர்தல் முடிவு கருத்து கணிப்புக்கு நேர் எதிராக இருக்கும்: சோனியா காந்தி

Published On 2024-06-03 09:08 GMT   |   Update On 2024-06-03 13:42 GMT
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தகவல்.
  • மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பிடிக்க வாய்ப்பே இல்லை- எதிர்க்கட்சிகள்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் அனைத்து நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளை தாண்டாது என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தார்கள். இதனால்தான் ஜூன் 1-ந்தேதி கார்கே வீட்டில் தலைவர்கள் சந்தித்து பேசினார். அப்போது வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, கர்நாடகா துணை முதல்வர் டிகு சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து கணிப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர். கருத்து கணிப்பை மீறி 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் உன உறுதியாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என மிகவும் நம்புவதாக தெரிவித்தள்ளார்.

இது தொடர்பாக சோனியா காந்தி கூறுகையில் "நாம் காத்திருக்க வேண்டும். காத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு முற்றிலும் எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம்.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

"இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்று அழைக்கக் கூடாது. இது மோடி மீடியா கணிப்பு" என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News