இந்தியா

ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார்

Published On 2024-05-21 09:58 GMT   |   Update On 2024-05-21 09:58 GMT
  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
  • அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது. பின்னர் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.

இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்திய தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.

இந்த நிலையில் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாளை அவர் ஈரான் புறப்பட வாய்ப்புள்ளது. அஜர்பைஜான்- ஈரான் எல்லையில் இருந்து தப்ரிஸ் திரும்பும்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

Tags:    

Similar News