இந்தியா
அமெரிக்க தூதராக வினய் குவாத்ரா நியமனம்: வெளியுறவுத்துறை அறிவிப்பு
- அமெரிக்க தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரியில் ஓய்வுபெற்றார்.
- வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ராவை நியமனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் உறுதியையும் தொடர்ச்சியையும் கொண்டு வருவார் என்பதற்காக வினய் குவாத்ராவுக்கு தூதர பதவி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
வினய் குவாத்ரா சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.