இந்தியா

விமர்சனத்தை ஏற்படுத்திய மந்திரியின் கொண்டாட்டம்- வீடியோ

Published On 2024-07-01 04:44 GMT   |   Update On 2024-07-01 04:44 GMT
  • வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்தது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

டி-20 உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மந்திரி விஸ்வாஸ் கைலாஸ் சாரங் தனது காரின் மீது அமர்ந்தபடி கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மந்திரி தனது காரின் மீது அமர்ந்து கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். அவரது உதவியாளர்கள் காரின் இருபுறமும் சாகசம் செய்தவாறு பயணம் செய்யும் காட்சிகளும் உள்ளது.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். மந்திரியே இப்படி செய்தால், சாமானியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதுபோன்ற செயலை வேறு யாராவது செய்திருந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என கூறியுள்ளார். இதுபோன்று ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News