இந்தியா

6 உயிர்களை 8 மணி நேரம் போராடி மீட்ட 'சூப்பர் ஹீரோக்கள்'- கேரள முதல்வர் நெகிழ்ச்சி

Published On 2024-08-03 01:20 GMT   |   Update On 2024-08-03 01:20 GMT
  • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News