இந்தியா

வயநாடு நிலச்சரிவு: இரவிலும் தொடரும் மீட்புபணி

Published On 2024-07-30 14:49 GMT   |   Update On 2024-07-30 14:49 GMT
  • இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
  • கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கேரளா மாநிலம் வயநாடு சூரல் மலையில் ஆற்றின் நடுவே இரவிலும் தொடந்து மீட்புபணிகள் நடந்து வருகிறது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணியானது நடைப் பெற்று வருகிறது.

Tags:    

Similar News