இந்தியா
போலி பணி ஆணையால் சிக்கிய இந்தியர்களை மீட்போம்: வெளியுறவுத்துறை
- போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.
ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.