சமூக வலைத்தளங்களில் போலிகளை எதிர்கொள்ள புதிய விதிமுறை: மத்திய அமைச்சர்
- சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
- முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டவர்), இன்ஸ்கிராம் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு செய்தியை பதிவிட்டால், நொடிப்பொழுதிற்குள் பெரும்பாலானோரை சென்றடைந்துவிடும்.
ஆரம்ப காலத்தில் உண்மையான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது போலிச் செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை நம்பி வன்முறைகள் ஏற்படுவது. நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கப்படுவதும் உண்டு.
இதை கட்டுப்படுத்த சமூக வலைத்தளங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் முற்றிலும் போலியான செய்திகள் பரப்பப்பட்டுதான் வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில் ''முற்றிலும் போலியான செய்திகளை எதிர்கொள்ள நாம் புதிய விதிமுறை கொண்டு வர இருக்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்கள், முற்றிலும் போலியான தரவுகளை கண்டுபிடித்தல், தடுத்தல் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான நடைமுறை தேவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது" என்றார்.