ஆந்திராவுக்கு ரூ.7000 கோடி மின் பாக்கி தர மாட்டோம்- தெலுங்கானா அதிகாரிகள் திட்ட வட்டம்
- கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிப்புக்காக கூட்டு நடவடிக்கை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- ஆந்திர மாநில அரசு, தெலுங்கானாவுக்கு ரூ. 81 கோடியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநில முதன்மைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் இரு மாநில பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக மங்கலகிரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது ஆந்திரா மறு சீரமைப்பின் போது அட்டவணை 9 மற்றும் 10 பட்டியலிடப்பட்ட கணக்கில் உள்ள வைப்பு தொகை குறித்து விவாதித்தனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டபோது தெலுங்கானா அரசு ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய ரூ 7 ஆயிரம் கோடி மின் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.
விவாதத்தின்போது தெலுங்கானா அதிகாரிகள் ஆந்திராவுக்கு மின் பாக்கியாக வழங்க வேண்டிய ரூ.7 ஆயிரம் கோடியை தர முடியாது என திட்டவட்டமாக பேசினர்.
இதனால் அடுத்த கூட்டத்தில் மின் கட்டண பாக்கி செலுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிப்புக்காக கூட்டு நடவடிக்கை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கலால் வரி மதுவிலக்கு அமலாக்க த்துறை சார்பில் ஆந்திர மாநில அரசு, தெலுங்கானாவுக்கு ரூ. 81 கோடியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளனர்.