இந்தியா
கட்சி தலைவர்கள் மீது அதிருப்தி- மம்தாவிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய மிமி சக்ரபோர்த்தி
- ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
- தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி.
மேற்குவங்க எம்.பியும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மிமி சக்ரபோர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஆனால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் மிமி சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல், மம்தாவிடம் வழங்கியதற்கான காரணம் குறித்து மிமி சக்ரபோர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மிமி, " கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.