இந்தியா

வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்

Published On 2024-08-16 11:13 GMT   |   Update On 2024-08-16 11:13 GMT
  • வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News