இந்தியா

'56 இஞ்ச்' மோடியால் சீனாவின் அத்துமீறலை ஏன் தடுக்க முடியவில்லை - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Published On 2024-04-01 15:11 GMT   |   Update On 2024-04-01 15:11 GMT
  • இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்
  • சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது. தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.

தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.

சீனப் பிரதமருடன் குறைந்தபட்சம் 19 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது எந்த ராஜதந்திர செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தியப் பகுதிகளுக்கு 'மறுபெயர்' செய்யும் இந்த அபத்தத்தை நிறுத்த முடியவில்லை.

டோக்லாம் மற்றும் கால்வானுக்குப் பிறகு, லடாக்கில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்கள் நடந்த பிறகு, பிரதமர் மோடி வசதியாக சீனா மீது எந்த தவறும் இல்லை என்றார்.

"56 இன்ச்" என அழைக்கப்படும் மோடி சைனீஸ் பிளிங்கர்ஸ் அணிந்துள்ளார்!

கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்த பிறகு, சீனர்களுக்கு இலவச பாஸ் வழங்கிய பிரதமர் மோடியை எந்த திசை திருப்பினாலும் மாற்ற முடியாது!

பல்வேறு நாடுகளின் பிரதேசங்களுக்கு உரிமை கோருவது மற்றும் பெயர் மாற்றம் செய்வதை சீனா தொடர்ச்சியாக செய்து வருகிறது.

சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்.

மோடி அரசாங்கத்தால் செய்யக்கூடியது என்னவென்றால் குறைந்தபட்சம் சீனாவின் இந்த அபத்தமான செயல்கள் மற்றும் அறிக்கைகளை கடுமையாக கண்டிப்பதும்தான்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News