இந்தியா

நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு

Published On 2024-07-11 14:12 GMT   |   Update On 2024-07-11 14:12 GMT
  • 2020-2021-ல் டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
  • அதன்பின் டெல்லி மாநிலத்திற்கு டிராக்டர் பேரணி மேற்கொள்ள முடிவு செய்தனர்.

சட்டப்பூர்வமான எம்எஸ்பி (legal guarantee to MSP), விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கமான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா (SKM) தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்படும். மற்றும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் ஆகியோருக்கு விவசாயிகள் போராட்டம் குறித்த குறிப்பாணை வழங்கப்படும்.

2020-2021-ல் டெல்லி பஞ்சாப்- டெல்லி- அரியானா மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் டெல்லி நோக்கி டிராக்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறை மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலங்களில் கவனம் செலுத்துவோம்.

எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான போராட்ட முறையை பயன்படுத்தமாட்டோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

விவசாயிகள் போராட்டத்தால் மக்களவை தேர்தலில் ஆதிக்கமான 159 புறநகர் தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்திக்க நேரிட்டது என எஸ்கேஎம் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு என்பதை போன்று கார்பரேட்கள் வெளியேறு அனுசரிக்கப்படும்.

உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும், மேலும் பன்னாட்டு நிறுவனங்களை விவசாயத் துறையில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும்.

Tags:    

Similar News