விப்ரோ சி.இ.ஓ. தியரி டெலாபோர்ட் திடீர் ராஜினாமா
- விப்ரோ நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- புதிய சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) ஆக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து கீழறங்குகிறார் என விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த முக்கிய தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனிவாஸ் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார் என விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
புதிய சி.இ.ஓ. ஆக பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீனிவாஸ் பாலியா, புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் என்றார்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிறுவனத்திற்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.