இந்தியா

மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்களை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை

Published On 2024-09-05 02:46 GMT   |   Update On 2024-09-05 02:46 GMT
  • ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
  • துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன.

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News