இன்ஸ்டாவில் ஃபேக் அக்கவுண்ட் மீது காதல்.. பெண் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி
- தனது தோழியை கிண்டல் செய்ய போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
- மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.
காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
அந்த போலியான கணக்கில் நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12 ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.