தேனிலவுக்கு பதில் ராமர் கோவில்... விவாகரத்து கோரிய மனைவி
- பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேதனை அடைந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி தேனிலவுக்கு எங்கும் செல்லாத நிலையில், கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று அப்பெண் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது கணவர் தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று கூறி அதை நிராகரித்துள்ளார்
இந்நிலையில், அத்தம்பதி தேனிலவுக்காக கோவா செல்ல திட்டமிட்டு ஏற்பாடுகளையும் செய்த நிலையில், திடீரென கணவரின் தாய் அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டைக்கு முன் அந்த இடங்களுக்கு செல்ல விரும்புவதாகக் கூறி அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த அந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அயோத்தி மற்றும் வாரணாசியில் இருந்து தம்பதியும் அவரது மாமியாரும் திரும்பி வந்து பத்து நாட்களுக்குப் பிறகு அப்பெண், கடந்த வாரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.