பணிச்சுமை.. அழுத்தம் தாங்க முடியாமல் 'அடல் சேது' பாலத்தில் இருந்து குதித்த வங்கி மேலாளர்..
- குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
- பணிச்சுமை இருந்ததாக மேலாளரின் மனைவி தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (செப்டம்பர் 30) காலை சுமார் 10 மணி அளவில் அந்த நபர், பாலத்தின் தெற்கு பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து கீழே இறங்கிய நபர் திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவருக்கு மனைவி, ஏழு வயது மகள் மற்றும் மாமியாருடன் பரேலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.
இது குறித்து மூத்த காவல் ஆய்வாளர் ரோஹித் கோட் கூறும் போது, "போக்குவரத்துத் துறையிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதன் பிறகு அந்த நபரைக் கண்டுபிடிக்க குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன."
"வாகனத்தின் பதிவு எண்ணை ஆர்டிஓவுக்கு அனுப்பியுள்ளோம், அவர் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் எங்களுக்கு உதவினார். சக்ரவர்த்தி தனது தொலைபேசி மற்றும் கார் சாவியுடன் கடலில் குதித்ததால், எங்களால் அவரை அணுக முடியவில்லை, அதைத் தொடர்ந்து பரேலில் உள்ள அவரது முகவரிக்கு ஒரு குழுவை அனுப்பினோம்."
"நாங்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்தோம், விசாரணையின் போது, அவர் பணி அழுத்தத்தில் இருப்பதாக சக்ரவர்த்தியின் மனைவி எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.
*தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது!!
*தற்கொலை தடுப்பு சார்ந்த உதவிக்கு தயங்காமல் 044 2464 0050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!!