இந்தியா

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

Published On 2023-07-03 21:07 GMT   |   Update On 2023-07-03 21:07 GMT
  • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தவறான சிக்னலே ரெயில் விபத்துக்கு காரணம் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் லூப் லைனில் சென்று சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News